தேவையான பொருட்கள்
அரைக்கீரை - ஒரு கட்டு
கடலைப்பருப்பு - இரண்டு கிண்ணம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஐந்து
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து ஒன்று இரண்டாக நீர் விடாமல் அரைக்கவும் .
அரைத்த பருப்பு கலவை உடன் உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அரை கீரையை சேர்க்கவும்.
இவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து வடைகளாக தட்டி வைக்கவும்.
எண்ணையை சூடாக்கி தட்டிய வடைகளை பொரித்து எடுத்தால் அரைக்கீரை வடை தயார்.
Excellent keerai vadai👌
ReplyDelete