ரகடா பட்டீஸ் ( மும்பை)

kuttybabuPPT
0
ரகடா பட்டீஸ் ( மும்பை)

வடநாட்டு உணவான ரகடா பட்டீஸ் மும்பையில் பிரபலமானது :

 ரகடா என்பது பட்டாணி கொண்டு தயாரிக்கப்படும் ஒருவகை கிரேவியாகும்.

 பட்டீஸ் என்பது சிறு கட்லெட் போல இருக்கும்.

 பிரகடா தயாரிக்கும் முறை:

 வெள்ளை பட்டாணி தண்ணீரில் ஊற வைத்தது - ஒரு கப் 

தண்ணீர் - ஒன்னரை கப் 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை

 உப்பு - தேவையான அளவு 

செய்முறை

பிரஷர் குக்கரில் பட்டாணி, மஞ்சள் தூள், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து வேக வைக்கவும்.

 பின்பு அதை கிரேவி பதத்துக்கு நன்றாக மசைத்துக் கொள்ளவும்.

 பட்டீஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - ஏழு

 இஞ்சி விழுது - அரை டீஸ்பூன் 

பச்சை மிளகாய் - ஒன்னு

 கொத்தமல்லி தலை - ஒரு கைப்பிடி

 எண்ணெய் - 6 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

உருளை கிழங்குகளை வேக வைத்து தோல் உரித்து மசிக்கவும்.

 பச்சை மிளகாய், கொத்தமல்லி தலையை பொடிதாக நறுக்கவும்.

 உருளைக்கிழங்குடன் உப்பு, இஞ்சி விழுது, பச்சை மிளகாய், கொத்தமல்லி தலை சேர்த்து கலக்கவும்.

 இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கட்லெட் போல தயார் செய்து வைக்கவும்.

  தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் .

பின்பு தயார் செய்து வைத்திருக்கும் பட்டீஸ் கலை தோசை கல்லில் சுற்றிலும் அடுக்கவும்.

 மிதமான தீயில் அவற்றை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

 பரிமாறும் முறை 
தேவையான பொருட்கள் 

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 சீரகத்துள் - அரை டீஸ்பூன் 

பெரிய வெங்காயம் சிறியதாக நறுக்கியது - அரை

கொத்தமல்லி தலை - சிறிதளவு 

சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 கொத்தமல்லி சட்னி - ஒரு டீஸ்பூன்

 இனிப்பு சட்னி - ஒரு டீஸ்பூன்

 ஓமப்பொடி - இரண்டு ஸ்பூன்

 பிளாக் சாலட் - தேவைக்கேற்ப 

சற்று குழிவான தட்டில் இரண்டு கரண்டி பட்டாணி கிரேவியை ஊற்றி அதன் மேல் இரண்டு பட்டிஸ்களை வைக்கவும்.

 அதற்கு மேலே சட்டினி வகைகளை பரவலாக ஊற்றவும் .

பின்பு மிளகாய் தூள் , பிளாக் சாலட், சீரகத்துள் மற்றும் சாட் மசாலா தூள் ஆகியவற்றை தூக்கவும்.

 அதன் மேல் வெங்காயம், கொத்தமல்லி தலை, ஓமப்பொடியை தூவவும்.

 இந்த கலவையை லேசாக கிளறி விடவும்.
 இப்போது ரகடா பட்டீஸ் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)