மதுரை மட்டன் சுக்கா சாப்பிட்டா இருக்கும் பக்கா

kuttybabuPPT
0
மதுரை மட்டன் சுக்கா 

தேவையானவை

 மட்டன் - 200 கிராம் 

சின்ன வெங்காயம் - கால் கப் 

பூண்டு - பத்து பற்கள்

 தக்காளி - ஒன்று 

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் - அரை டீஸ்பூன் 

தேங்காய் பால் - இரண்டு டேபிள் டீஸ்பூன் 

உப்பு, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை, கருவேப்பிலை இலை, எண்ணெய் போன்றவற்றை - தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 செய்முறை 

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் மட்டன் துண்டுகளை போட்டு மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

 பின்பு அதில் சிறிது தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் ஆறு முதல் ஐந்து விசில்கள் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும் .

அதன் பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பின் வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 பின் அதில் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி பின் மீதமுள்ள மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளற வேண்டும் .
 மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும் அதில் தேங்காய் பால் சேர்த்து தேங்காய் பாலும் வற்றும் வரை நன்கு கிளறி இறக்கினால் கமகமக்கும் மதுரை மட்டன் சுக்கா ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)