தேவையானவை
வேகவைத்த பனங்கிழங்கு - ஆறு
தண்ணீர் - கால் கப்
பனைவெல்லம் - ஒரு கப்
ஏலக்காய் - 2
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய பாதாம், பிஸ்தா, கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பக்குவம்
ஒரு தட்டில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி நன்றாக தடவி வைக்கவும்.
குறைவான நீரில் பனங்கிழங்கின் வெளி பக்கத்தில் உள்ள நார்களை நீக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் ஏலக்காயுடன் சேர்த்து லேசாக அரைத்து எடுக்கவும்.
தனியாக வானலியில் ஒரு சிட்டிகை நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள பனங்கிழங்கு துருவலை விதமான சூட்டில் 10 நிமிடம் வதக்கவும்.
அதன்பிறகு பனைவெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும் .
பனங்கிழங்கு துருவல் வெல்லத்துடன் நன்றாக கலந்து கெட்டியாக மாறும் வரை வதக்கவும்.
இறுதியாக மீதமுள்ள நெய்யை சேர்த்து மேலும் ஒரு சில நிமிடம் நன்கு கிளற வேண்டும்.
பின்பு நெய்யை தடவிய தட்டில் பர்பியை கொட்டி வெட்டவும்.
துருவிய பாதாம், பிஸ்தா தெளித்தால் பர்பி சுவையாக இருக்கும்.