1. கத்திரிக்காய் கூட்டு பொரியல் எது செய்தாலும் கொஞ்சம் கடலைமாவி தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கவும். மணம் கமகமவென இருக்கும்.
2. கேரட்டில் சூப் செய்தால் அதில் துளி சேமியாவை வறுத்து போட்டால் சூப் திக்காக குழம்பிக் கொண்டு பார்க்க அழகாகவும், சுவையாகவும் இருக்கும்.
3. எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
4. பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி பஜ்ஜி மாவில் தேய்த்து பொறித்தால் சுவையாக இருக்கும்.
5. மைக்ரோ ஓவனில் மறுசூடு செய்யும் போது சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால் அவை வறண்டு போகாமல் இருக்கும்.
6. கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்க்கலாம் .அதை இட்லி தட்டில் வைத்து மூடி சிறிது நேரம் ஆவியில் வேகவைத்து எடுத்தால் பிரட் துண்டுகள் உருதுவாகிவிடும்.
7. தேங்காய் சட்னிக்குரிய பொருள்களோடு சிறிதளவு தனியாவையும் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
8. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் சமயம் சிறிது தயிர் நெய் சேர்த்தால் கமகமவென்று மணக்கும்.
9. ரவா, மைதா, அரிசி போன்றவற்றை வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு வசம்பை தட்டி போட்டு வைத்தால் புழு பூச்சிகள் வராது.
10. கேரட்டை பொடி பொடியாக நறுக்கி கடலைமாவு, ரவை, அரிசி மாவு, உப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை மிளகாய் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றோடு சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான கேரட் பக்கோடா ரெடி.
11. எந்தவித ஊறுகாய் செய்தாலும் கடுகு எண்ணெய் ஊற்றி வைத்தால் நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
12. இட்லி கல் போன்று கெட்டியாக இருந்தால் 4 அல்லது 5 அப்பளங்களை தண்ணீரில் நினைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அறைத்து இட்லி மாவில் கலந்து பின்னர் இட்லி ஊற்றினால் இட்லி மிருதுவாக இருக்கும்.
13. வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாலித்தால் நல்ல மணத்துடன் தனி சுவையோடு இருக்கும்.
14. தேங்காய் அடர்த்தியாக இருக்கிறதா? என்று அறிய உடைக்காமல் நல்ல தேங்காயென்று அறிய தலையில் பகிடு மாதிரி கூடுகள் தெரியும். இந்த கோடி எடுப்பாக இருந்தால் தேங்காயின் வெண் பகுதியில் அடர்த்தியாக இருக்கும்.
15. கேஸ் அடுப்பில் உள்ள பித்தளை பர்னரை நெய்யில் பாலிஷ் ரிமூவர் கொண்டு கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
16. எண்ணெய் வாங்கும் கவரை சேகரித்து வைத்து சப்பாத்தி பூரி தேய்த்துக்கொண்டு ஒவ்வொன்றாக போட வசதியாக இருக்கும்.