தேவையானவை
அரிசி - 2 டம்ளர்
மைசூர் பருப்பு - கால் டம்ளர்
பாசிப்பருப்பு - கால் டம்ளர்
வெங்காயம் நறுக்கியது - ஒன்று
தக்காளி நறுக்கியது - ஒன்று
பச்சை மிளகாய் - ஆறு
பட்டை லவங்கம் - சிறிதளவு
புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
அளவு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
நெய் - இரண்டு தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு அரிசி, பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும் .
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு வதக்கி, பிறகு அரைத்த தக்காளி, வெங்காய விழுது, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
நன்றாக வதங்கிய பின் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி, வெங்காய கலவையில் ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் சேர்த்து அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பு, மைசூர் பருப்பு போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
நன்றாக வெந்ததும் வாணலியில் நெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, சீரகம், முந்திரி தாளித்து பாெங்களில் கொட்டவும்.
சுவையான மசாலா பொங்கல் தயார்.
புதினா துவையல், தக்காளி தொக்கு போன்றவை அருமையான இணைகள்.
வித்தியாசமான சுவையுடன் விளங்கும் இந்த மசாலா பொங்கல்.