தேவையானவை
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, பூசணி, பரங்கி, வாழைக்காய், கேரட், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு பெரிதாக நறுக்கிய துண்டுகள் - இரண்டரை கப்
அவரை, பீன்ஸ் கால் இன்ச் நீலத்துண்டுகள் - தலா அரைக்கப்
துவரம்பருப்பு - அரை கப்
மைசூர் பருப்பு - ஆறு தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க
பெருங்காயம் - ஒரு துண்டு
உளுந்தம் பருப்பு - ரெண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - நான்கு தேக்கரண்டி
தனியா - 6 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 15
மிளகு - ரெண்டு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
துருவிய தேங்காய் - அரைக் கிண்ணம்
தாளிக்க
கடுகு - இரண்டு தேக்கரண்டி.
பச்சை மிளகாய் - 4
கருவேப்பிலை, கொத்தமல்லி தலை சிறிதளவு
செய்முறை
துவரம் பருப்பு, மைசூர் பருப்பை நன்றாக கழுவி தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் பெருங்காயம், உளுந்து, கடலை பருப்பு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, வெந்தயம், தேங்காய், தனியா சேர்த்து சிவக்க வறுத்து ஆறியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரையுங்கள்.
புளியுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
பூசணி,பரங்கி, கத்திரிக்காய், வாழக்காய் தவிர மற்ற காய்கறி துண்டுகளை சிட்டிகை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பின்னர் புளிக்கரைசலில் பூசணி, பரங்கி, வாழைக்காய், கத்தரிக்காய் துண்டுகளை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
சற்று புளி வாசனை போனதும் பாதி அளவு வெந்த காய்கறிகள் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
நன்கு கொதித்து வந்ததும் அரைத்த கலவை வேகவைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பத்து நிமிடம் கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, கீரிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்தால் மணமாக்கும் கலவை குழம்பு தயார் .
பலன்கள்
வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்கு வகை காய்கறிகள் பலச் சத்துக்களை தன்னூள் கொண்டுள்ளன.
இதை உடலில் உள்ள சர்க்கரையின் அளவையும், மாவுப்பொருளின் அளவையும் சம நிலையில் வைப்பதில் உதவி புரிகின்றன.