தேவையானவை
ஓட்ஸ் - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
மிளகு , சீரகம் தலா - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - இரண்டு
கருவேப்பிலை - சிறிது
முந்தரி பருப்பு - ஆறு
செய்முறை
அடுப்பில் வாணலியை வைத்து ஓட்ஸ் பாசிப்பருப்பை தனித்தனியாக வறுக்கவும் .
தோல் சீவி இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும் .
மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றாக பாெடிக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து அதில் ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு மற்றும் மூன்று கப் தண்ணீர் ஊற்றி மூடி மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
சற்று ஆறிய உடன் குக்கரை திறந்து மசித்து விடவும் .
அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு சூடானவுடன் அதில் முந்திரி, பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் பொடித்த மிளகு சீரகத்தை போட்டு தாளித்து அதை பொங்கல் மேல் ஊற்றி கிளறி விடவும்.
சுவையான ஓட்ஸ் பொங்கல் தயார்.