தேவையானவை
வரகரிசி - ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
பால் - 3 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
நெய் - ரெண்டு கரண்டி
முந்திரி, திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய், ஜாதிக்காய் பொடி - தலா ஒரு சிட்டிகை
செய்முறை
பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.
வெல்லத்தில் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் பால் காெதித்ததும் வரகரிசி பாசிப்பருப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து குலைய வேக விடவும் .
அடுப்பை கடாயில் வைத்து வெல்லப்பாகை அதில் சேர்க்கவும்.
சேர்த்து கிளறவும்.
முந்திரி, திராட்சை, ஏலக்காய், ஜாதிக்காய் பொடியை நெய்யில் வறுத்து கலவையில் சேர்த்து இறக்கவும்.
கலகையான வரகரிசி பால் பொங்கல் தயார் .
பலன்கள்
வரகரிசியில் மாவு சத்து குறைவாகவும், நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது.
இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகுவதில்லை.
மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்கும் தன்மை உடையது.
உடல் எடை குறையவும் வரகு அரிசி நல்ல தீர்வாக அமையும்.