குதிரைவாலி வெண்பொங்கல் (பொங்கல் வார ஸ்பெஷல்)

kuttybabuPPT
0
குதிரைவாலி வெண்பொங்கல்

தேவையானவை

 குதிரைவாலி அரிசி - அரை கிலோ

 பாசிப்பருப்பு - 300 கிராம் 

முந்திரி - 100 கிராம்

 கருவேப்பிலை - சிறிது 

சீரகம், மிளகு தலா - ரெண்டு டீஸ்பூன்

 இஞ்சி - ஒரு துண்டு

 உப்பு , நெய் - தேவைக்கு ஏற்ப

 பச்சை மிளகாய் - 3 

காய்ந்த மிளகாய் - மூன்று 

செய்முறை

குதிரைவாலி அரிசியை கழுவிக்கொள்ளவும்.

 பாசிப்பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்.

 பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, மிளகு, சீரகம், முழு பச்சை மிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து ஒன்னுக்கு மூன்று பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 கொதித்த பின் குதிரைவாலி அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து வேக விடவும்.

 நன்றாக வெந்தவுடன் நெய் விட்டு கிளறி இறக்கவும்.

 சூடான குதிரைவாலி வெண்பொங்கல் ரெடி .
இதற்கு கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட ஏற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)