தேவையானவை
பச்சரிசி - ஒரு கப்
பாசிப்பருப்பு - அரை கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
சீரகம் , பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்.
உப்பு - தேவைக்கு
மிளகு - இரண்டு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
கருவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் (அ) நெய்- இரண்டு டேபிள்ஸ்பூன்
முந்திரி - பத்து
செய்முறை
பருப்பை இளம் சிவப்பாக வெறும் வாணலியில் வறுத்து கொண்டு அரிசி உடன் சேர்த்து களைந்து குக்கரில் குழைய வேக விடவும் .
மிளகு, சீரகத்தை வறுத்து ஒன்று இரண்டாக பாெடித்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகள் செய்யவும்.
முந்திரியை துண்டுகள் செய்யவும்.
வாணலியில் நெய் அல்லது எண்ணெய் காய வைத்து முந்திரியை வறுத்து எடுத்துக்கொண்டு.
சீரகம் ,பெருங்காயம், கருவேப்பிலை தாளித்து பொங்கல் கொட்டி உப்பு, மிளகு, சீரகப்பொடி, வறுத்த இஞ்சி துண்டுகள் மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி மணக்க மணக்க பரிமாறவும்.