தந்தூரி சிக்கன் பீட்சா

kuttybabuPPT
0
தந்தூரி சிக்கன் பீட்சா 


தேவையானவை

மைதா - ஒரு கப் 

கோதுமை - ஒரு கப் 

சர்க்கரை - ஒரு கப் 

உப்பு - அரை கப்

 தண்ணீர் - ஒரு கப் 

ஈஸ்ட் - இரண்டு ஸ்பூன்

 வெதுவெதுப்பான தண்ணீர் - கால் கப்

 சிக்கன் வேக வைத்தது - ஒரு கப்

 மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

 வெண்ணெய் - ரெண்டு ஸ்பூன்

 மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன் 

மாங்காய் பொடி - கால் ஸ்பூன்

 தயிர் - ஒரு ஸ்பூன்

 பூண்டு துருவியது - நான்கு 

கசூரி மேத்தி - ஒரு ஸ்பூன்

 குடைமிளகாய் - சிறிதளவு 

பெரிய வெங்காயம்  - சிறிதளவு

 செய்முறை 

அகலமான பாத்திரத்தில் மைதா, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரை, ஆக்டிவ் செய்யப்பட்ட ஈஸ்ட் சேர்த்துக் கொள்ளவும்.

 அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்.

 பிசைந்த மாவை வைத்து மூடி 2 மணி நேரம் வைக்கவும் .

குக்கரில் சிறிய துண்டுகளாக சிக்கன், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

 பின்னர் பாத்திரத்தில் வெண்ணை, காஷ்மீர் மிளகாய்த்தூள், மாங்காய் பொடி , கருப்பு உப்பு, தயிர் துருவிய பூண்டு, சில்லி பிளக்ஸ், இட்டாலியன் சீசனிங், கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலக்கவும்.

 இதில் வேகவைத்த சிக்கனை சேர்க்கவும் .

எடுத்து வைத்துள்ள பீட்சா மாவை மீண்டும் ஒரு முறை பிசைந்து பின்னர் மூன்றாக பிரித்து பேக்கிங் தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும் .

இதில் சிறு சிறு துளிகள் இட்டுக் கொள்ளவும்.

 இப்பொழுது தயாராக உள்ள பீட்சா சாஸ் தேவையான அளவு தடவிக்கொண்டு இதன் மேல் தந்தூரி சிக்கன் கலவையை சேர்த்து வெங்காயம், குடைமிளகாய் சேர்க்கவும்.
 இதனை ஓவனில் வைத்து 12 நிமிடங்களுக்கு வேக வைத்து எடுத்தால் சூடான சூவையான தந்தூரி சிக்கன் பீசா ரெடி...!

Post a Comment

0Comments
Post a Comment (0)