ரவை அடை

kuttybabuPPT
0
ரவை அடை

தேவைப்படும் பொருட்கள் 

 ரவை - அரை கிண்ணம் 

தேங்காய் துருவல் - கால் தேக்கரண்டி

 மிளகுத்தூள் - கால் தேக்கரண்டி

 பச்சை மிளகாய் - இரண்டு 

எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

 கருவேப்பிலை - சிறிது 

உப்பு - தேவையான அளவு 

கடுகு - கால் தேக்கரண்டி

 பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி

 செய்முறை

வாாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கருவேப்பிலை, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.

 பிறகு அதில் ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு ரவை, உப்பு சேர்க்கவும்.

 அது கொதிக்க ஆரம்பித்தவுடன் கெட்டியாக கிளறி இறக்கவும்.

 தோசை கல்லை காய வைத்து ரவை கலவையை சுறு உருண்டைகளாக தட்டி போட்டு இரண்டு புறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும்.
 ரவை உப்புமா சாப்பிட்டு சலித்து போனவர்களுக்கு இந்த ரவை அடை வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)