குட வாழை அரிசி அல்வா

kuttybabuPPT
0
குட வாழை அரிசி அல்வா

தேவையானவை 

குட வாழை அரிசி - இரண்டு கப்

 தேங்காய் துருவல் - ஒரு கப்

 நெய் - எட்டு தேக்கரண்டி 

முந்திரி - 10 

ஏலக்காய் - 8 

பொடித்த வெல்லம் - இரண்டு கப்

 செய்முறை 

குடவாழை அரிசியை இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

 தண்ணீரை வடித்து தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வழுதாக அரைக்கவும்.

 ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் .

அதனுடன் அரிசி மற்றும் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.

 கெட்டியாகும் வரை சிறிது சிறிதாக நெய் சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறவும்.

 பிறகு ஏலக்காய் தூள், நெய்யில், வறுத்த முந்திரி சேர்த்து வதக்கவும்.

 நன்கு கலந்து அல்வா பதம் வரும் வரை நன்றாக கிளறவும். சூடாக பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)