தேவையானவை
அவல் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 200 கிராம்
சிறிய வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 5
கருவேப்பிலை - ஒரு ஆழக்கு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
அவலை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் கடலை பருப்பை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் நறுக்கிய சிறிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனை வடையாக தட்டி எண்ணெயில் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூடான அவல் வடை தயார்.