வெங்காயத்தாள் கூட்டு

kuttybabuPPT
0
வெங்காயத்தாள் கூட்டு

தேவையானவை

 வெங்காயத்தாள் நறுக்கியது - ஒரு கட்டு 

பாசிப்பருப்பு - 50 கிராம் 

துவரம் பருப்பு - நூறு கிராம் 

சாம்பார் பொடி - அரை மேசைக்கரண்டி

 மஞ்சள் பொடி - அரை மேசைக்கரண்டி

 பச்சை மிளகாய் - 3 

வெங்காயம் நறுக்கியது - ஒன்று 

பால் - அரை கிண்ணம் 

கடுகு - ஒரு கிண்ணம் 

உளுந்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

 சீரகம் - ஒரு தேக்கரண்டி 

உப்பு, எண்ணை - தேவையான அளவு

 செய்முறை 

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் .

பின்னர் அதில் வேக வைத்த பருப்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 அதில் உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்க விடவும்.
 வெங்காயத்தாள் வெந்தவுடன் பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)