பார்லி வேர்கடலை சுண்டல் யாரையும் பண்ணாதிங்க கிண்டல்

kuttybabuPPT
0
பார்லி வேர்கடலை சுண்டல்
தேவையானவை

ஊறவைத்த பார்லி - ஒரு கப் 

வறுத்த வேர்க்கடலை - அரைக்கப் 

சீரகம், சோம்பு தலா - கால் டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - இரண்டு நறுக்கியது

 கொத்தமல்லி - சிறிதளவு

 இஞ்சி துருவல் - அரை டீஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

 தேங்காய் துருவல் - அரை கப்

 செய்முறை

ஊறவைத்த பார்லி வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும் .

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி துருவல் போட்டு தாளித்த பின் வெந்த பார்லி வேர்கடலை போட்டு உப்பு சேர்த்து கிளறவும்.

 பின் நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவலை சேர்த்து ஒன்றாக கலக்கி இறக்கவும்.

 பார்லி வேர்கடலை சுண்டல் ரெடி.

 குறிப்பு கர்ப்பிணி பெண்களுக்கும், நீர் பிரியாமல் சிரமப்படுபவர்களுக்கும் ஏற்ற சுண்டல் இது

Post a Comment

0Comments
Post a Comment (0)