தேவையான பொருட்கள்
சாமை அரிசி - 2 கப்
உளுந்தம் பருப்பு - அரை கப்
வெள்ளரிக்காய் பொடியாக நறுக்கியது - 50 கிராம்
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் மூன்று முறை கழுவி ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
'
தண்ணீரை நன்றாக வடிகட்டிய பிறகு மாவு அரைக்கும் இயந்திரத்தில் போட்டு மிருதுவாக அரைக்க வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றி எட்டு மணி நேரம் பிறகு மாவு புளித்தவுடன் அதில் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் கலந்து கொள்ள வேண்டும் .
உப்பு சரிபார்த்த பிறகு இட்லி தட்டில் நல்லெண்ணெய் தடவி இட்லியை வார்க்க வேண்டும்.
சூடான சுவையான சாமை அரிசி இட்லி தயார்.