தேவையானவை
கருப்பு எள் - அரை கப்
பூண்டு - இரண்டு பல்
காய்ந்த மிளகாய் - ஐந்து
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை - ஒரு கீற்று
புளி - கோலி அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெறும் வானலியை சூடாக்கி எள்ளை வறுத்துக்கொள்ளவும் .
உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து உப்பு, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
தேவைப்பட்டால் சிறிது எண்ணெய், கடுகு போட்டு தாளித்துக் கொள்ளலாம்.
எளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது.