தேவையானவை
அரிசி - 100 கிராம்
அவல் - 200 கிராம்
உப்பு - தேவைக்கு ஏற்ப
மிளகாய் - ஒன்று
கடுகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சித் துருவல் - சிறிதளவு
செய்முறை
அவல் அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும்.
மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி ஆகியவைகளை போட்டு தாளித்து கொட்டி கலக்கவும்.
தோசை கல்லில் மாவை தேவையான அளவு சேர்த்து மிதமான வெப்பத்தில் தோசைகளை சுட்டு எடுக்கவும்.
பலன்கள்
அவல் உடல் சூட்டைக்கும் தணித்து நல்ல புத்துணர்ச்சியை தருகிறது.
காலையில் அவல் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் அந்நாள் முழுமையும் சுறுசுறுப்புடனும் இருக்கச் செய்யும் .
குழந்தைகளின் வளர்ச்சிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
சர்க்கரை நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும்போது கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்னலாம்.