தேவையானவை
வரகு அரிசி - ஒரு கப்
கடலைப்பருப்பு - கால் கப்
துவரம் பருப்பு - கால் கப்
உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 7
வெங்காயம் பொடியாக நறுக்கியது - இரண்டு
இஞ்சி பொடியாக நறுக்கியது - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - கால் டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது -
சிறிதளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வரகரிசி நன்றாக இரண்டில் இருந்து மூன்று முறை கழுவி ஊற்ற வேண்டும் .
மற்றொரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.
ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைத்து பிறகு பருப்பு மற்றும் அரிசி அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை சேர்த்து குருணையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய காெத்தமல்லி, இஞ்சி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அடை மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ள வேண்டும் .
ஒரு தோசை தவாவில் அடைமாவை ஊற்றி அதன் மேல் துருவிய பீட்ரூட்டை மேலாக தூவி இருபுறமும் எண்ணெய் நன்றாக ஊற்றி பொன்முறுவலாக வார்த்து எடுக்க வேண்டும்.