தேவையானவை
கேழ்வரகு மாவு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
உடைத்து வறுத்து வேர்க்கடலை - கால் கப்
நெய் - அரை கப்
உப்பு - சிறிதளவு
செய்முறை
கேழ்வரகு மாவை நெய் விட்டு வறுத்து இதனுடன் சிறிது உப்பு, வெல்லத்தால் உடைத்த வேர்க்கடலை கலந்து கொள்ளவும் .
அடுப்பில் நெய்யை சூடு செய்யவும்.
நெய் சூடானதும் அதை மாவில் சேர்த்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்பு நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் அல்லது கொப்பரை சேர்த்தும் இந்த லட்டு செய்யலாம்.
இது சுண்ணாம்பு சத்து மிகுந்த உணவு குழந்தைகளுக்கு உடல் வலிமையை தரும்.