தேங்காய் பால் தேன்குழல் சாப்பிட்டு எழுதுங்க மடல்

kuttybabuPPT
0
தேங்காய் பால் தேன்குழல்


தேவையானவை

புழுங்கல் அரிசி - நான்கு கப்

 பொட்டுக்கடலை - அரைக்கப் 

உளுந்து - அரை கப் 

பெருங்காயம் - ஒரு டீஸ்பூன் 

உப்பு - தேவைக்கு

 துருவிய தேங்காய் - ஒரு கப்

 வெண்ணெய் - ரெண்டு டீஸ்பூன்

 எண்ணெய் - பொறிக்க 

செய்முறை 

புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து கழுவி உப்பு, தேங்காய் துருவலையும் சேர்த்து கிரைண்டரில் கெட்டியாக நைசாக அரைக்கவும்.

 வெறும் வாணலியில் உளுந்து, பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியாக லேசாக வருத்து மிக்ஸியில் பொடியாக அரைத்து, அரைத்த புழுங்கல் அரிசியுடன் இந்த பொடியையும் சேர்த்து வெண்ணெய், பெருங்காயத்தூள் கலந்து நன்றாக கலந்து விடவும்.

 தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து பிசையலாம்.

 வாணலியில் எண்ணெய் காய வைத்து தேன்குழல் அச்சில் மாவினை சேர்த்து முறுக்குகளாக பிழிந்து எடுக்கலாம்.

 சுவையான மனத்துடன் மொறுமொறுவென தேங்காய் பால் தேன்குழல் தயார்.
 ஒரு தட்டில் எண்ணெய் தடவி அளவாக பிழிந்து எடுத்து எண்ணெயில் போட ஒன்று போல முறுக்குகள் அழகாக வரும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)