சாக்லேட் கிறிஸ்மஸ் கேக்

kuttybabuPPT
0
சாக்லேட் கிறிஸ்மஸ் கேக்

தேவையானவை 

மைதா மாவு - 50 கிராம் 

கோகோ பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்

 பேக்கிங் பவுடர் - அரை டீஸ்பூன்

 சமையல் சோடா - ஒரு சிட்டிகை 

உப்பு சேர்க்காத வெண்ணை - 75 கிராம்

 கிராம்பு, முட்டை - இரண்டு

 சர்க்கரை - ஒரு கிராம்

 சர்க்கரை கேரமல் செய்ய - 20 கிராம்

 காய்ச்சி ஆரவைத்த பால் - தேவையான அளவு

 பேரிச்சை - 30 கிராம் 

டூட்டி ஃப்ரூட்டி - முப்பது கிராம்

 உலர் திராட்சை, முந்திரி - 30 கிராம்

 பாதாம், வால்நட் தலா - 20 கிராம்

 ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல் துருவல் - கால் டீஸ்பூன் 

வெண்ணிலா எசன்ஸ் - ஐந்து சொட்டுகள் 

பட்டை - ஒரு சிறிய துண்டு 

ஜாதிக்காய் - கால் டீஸ்பூன் 

உப்பு - கால்  டீஸ்பூன் (விரும்பினால்)

 செய்முறை 

வெண்ணையை ஃப்ரிச்சில் இருந்து வெளியே எடுத்து கொஞ்ச நேரம் அப்படியே வைக்க வேண்டும்.

 மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து சலிக்கவும்.

 ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் பாதாம், முந்திரி, வால்நட், பேரிச்சை, டூட்டி ஃப்ரூட்டி, ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல் துருவல், உலர் திராட்சை சேர்த்து கலக்கவும்.

 கிராம்புடன் பட்டை, ஜாதிக்காய் தூள் சேர்த்து மிக்ஸியில் பவுடராக அரைத்து எடுக்கவும்.

 சிறிதளவு சர்க்கரையை சேர்த்தால் சுலபமாக பொடிக்கலாம்.

 வாணலியில் கேரமல் செய்ய கொடுத்துள்ள சர்க்கரையை சேர்த்து லேசாக கருகும் வரை சிறு தீயில் வைத்து கிளறவும்.

 சர்க்கரை மாறும்போது கவனமாக கால் கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 மேலே தெறிக்கும் என்பதால் கவனமாக செய்ய வேண்டும்.

 நன்றாக கரைந்ததும் இறக்கி ஆறவிடவும் .

இதுவே கேரமல் செய்யும் பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.

 அதனுடன் பாெடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை பிளெண்டரால் அடிக்கவும்.

 பிறகு மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கரண்டியால் மெதுவாக கலக்கவும் .

முட்டை அடிக்கும் கரண்டியால் கலக்கவும்.

 பிளெண்டர் உபயோகிக்க வேண்டாம்.

 கேக் எழும்பும்போது தேவைப்பட்டால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.

 பிறகு கேரமல் சிறப்பு, வெண்ணிலா எசன்ஸ், நட்ஸ் கலவை, பாெடித்த கிராம்பு கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.

 குக்கரில் ஒரு கப் தூள் உப்பை பரப்பவும்.

 உப்பின் மீது தட்டு வைத்து குக்கரை மூடி 3 நிமிடங்கள் வரை சூடாக்கவும்.

 குக்கர் விசில் பயன்படுத்த வேண்டாம்.

 குக்கர் வெடித்து விடும்.

 பிறகு ஆறு இன்ச் அளவு கேக் பேண்டில் சிறிதளவு வெண்ணை தடவி மைதா மாவை தூவவும்.

 கேக் ஒட்டாமல் வர உதவும்.

  பிறகு லேசாக தட்டி குக்கர் மூடியை திறந்து பாத்திரத்தை உள்ளே வைத்து மீண்டும் மூடி சிறுத் தீயில் 30 நிமிடங்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.

 தேவையானால் மீண்டும் பத்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.

 பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறவிடவும்.
பானில் இருந்து கேக்கி வெளியே எடுத்து  விரும்பிய டெக்ரேட் செய்து கொள்ளலாம்.

அதை துண்டுகளாக்கி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)