எக்லெஸ் கிறிஸ்துமஸ் கேக்

kuttybabuPPT
0
எக்லெஸ் கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை 

மைதா - எண்பது கிராம்

 சர்க்கரை - 300 கிராம்

 வெண்ணிலா எசன்ஸ் - ரெண்டு டீஸ்பூன்

 உப்பு இல்லாத வெண்ணெய் - 75 கிராம்

 சூரியகாந்தி எண்ணெய் - 25 மில்லி

 பால் - அரைக்கப் 

வினிகர் - ரெண்டு டீஸ்பூன் 

பேரீச்சை - பத்து

 டூட்டி ஃப்ரூட்டி - ஒரு கைப்பிடி அளவு

 முந்திரி பாதாம் மற்றும் உலர்ந்த திராட்சை - ஒரு கைப்பிடி அளவு

 கஸ்டர்ட் பவுடர் - இரண்டு டேபிள் ஸ்பூன்

 உப்பு - ஒரு சிட்டிகை 

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன்

 கிராம்பு  - ஒன்று

 பட்டை - சிறிய துண்டு  

ஏலக்காய் - 2 

ஜாதிக்காய் பொடி   - ஒரு சிட்டிகை

 செய்முறை 

இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை தனியாக எடுத்து வைக்கவும்.

பேரீச்சையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபின் விழுதாக அரைக்கவும்.

 வெண்ணெய், பாலை லேசாக சூடாக்கி வெண்ணை உருகியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் தட்டிய கிராம்பு, தட்டிய பட்டை, ஜாதிக்காய் பொடி, தட்டிய ஏலக்காய், வெண்ணிலா எசன்ஸ், வினிகர், சூரியகாந்தி எண்ணெய், அரைத்த பேரிச்சை சேர்த்து கலக்கவும்.

 இதனுடன் சர்க்கரை சேர்க்கவும்.

 பழுப்ப்பு நிற சர்க்கரை சேர்த்தால் மிகவும் நல்லது.

இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரையில் கேரமல் செய்து இதனுடன் சேர்த்து கலக்கவும்.

 கிறிஸ்துமஸ் சாக்லேட் கேக் ரெசிபியில் கேரமல் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

 மைதாவுடன் உப்பு, பேக்கிங் சோடா, கஸ்டர் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும்.

 இதை சிறிது சிறிதாக முதலில் செய்த கலவையுடன் சேர்க்கவும்.

 தோசை மாவு பதம் வரவேண்டும்.

 இல்லை என்றால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம்.

 ஒரு டீஸ்பூன் மாவுடன் டூட்டி ஃப்ரூட்டி, நறுக்கிய நட்ஸ், உலர் திராட்சை சேர்த்து விசிறி இதை கேக் மாவுடன் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
 இந்தக் கலவையை கேக்கு பானில் ஊற்றி மைக்ரோவேவ் அவனில் அல்லது குக்கரில் வைத்து பேக் செய்யவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)