தேவையானவை
மைதா மாவு - 300 கிராம்
பேக்கிங் பவுடர் - மூன்று டீஸ்பூன்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
வெண்ணெய் - 200 கிராம்
பொடித்த சர்க்கரை - 250 கிராம்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
உலர்ந்த திராட்சை - 50 கிராம்
செர்ரி - 50 கிராம்
முட்டை - மூணு
பிஸ்தா பருப்பு - 50 கிராம்
சுல்தானாஸ் - 50 கிராம்
பட்டை , மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
கொக்கோ - ஒரு டீஸ்பூன்
பிராண்டி - 4 டேபிள்ஸ்பூன்
போர்டு வைன் - நான்கு டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்
குறிப்பு பிராண்டி (ம) போர்ட் வைன் உபயோகப்படுத்த வேண்டாம் என நினைப்பவர்கள் பால் 100 மில்லி உபயோகப்படுத்தலாம்.
செய்முறை
மைதா மாவு, பேக்கிங் பவுடர் சோடா, உப்பு, பட்டை மசாலா இவைகளை ஒன்றாக கலந்து மூன்று முறை கலக்கவும்.
பொடித்த சர்க்கரை உடன் வெண்ணை சேர்த்து நன்கு கலக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.
குலைத்த வெண்ணை கலவையுடன் அடித்த முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்.
மைதா மாவில் ஊற்றி எல்லாம் ஒன்று சேரும்படி ஒரே திசையில் லேசாக அழுத்தம் தராமல் கலக்கவும்.
இவற்றில் ஒயின் சேர்த்து கலக்கவும்.
கடைசியாக செரி பழங்கள், உலர்ந்த திராட்சை, சுல்தான் நட்ஸ், முந்திரிப் பருப்பு சேர்த்து பேக்கிங் ட்ரையில் ஊற்றி ஓவனில் 140 டிகிரி செல்சியஸ்க்கு பேக் செய்யவும்.
வெந்ததும் வெளியில் எடுத்து சூடு ஆறிய பின்னர் எடுத்து விரும்பிய படி அலங்காரம் செய்யலாம்.