தேவையானவை
வறுத்த கொள்ளு - 200 கிராம் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
வேகவைத்த உருளைக்கிழங்கு - 200 கிராம்
அறிந்து வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி துருவல் - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் - ஆறு
அறிந்தது கொத்தமல்லி அல்லது புதினா - அரை கப்
ரவை அல்லது ரஸ்க் தூள் - 90 கிராம்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 200 கிராம்
செய்முறை
வறுத்து ஊற வைத்த கொள்ளுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.
அதில் மசித்த உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், புதினா அல்லது கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து நமக்கு பிடித்த வடிவங்களில் தட்டி ரவை அல்லது ரஸ்க் தூளில் பிரட்டி எடுக்கவும்.
தோசை கல்லில் எண்ணெய் ஆறு ஸ்பூன் விட்டு தட்டிய கட்லெட்டுகளை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான கொள்ளு கட்லெட் ரெடி.
இதை வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்தும் எடுக்கலாம்.