கிச்சன் டிப்ஸ்

kuttybabuPPT
0
கிச்சன் டிப்ஸ்

காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப்,  முட்டைகோஸ் போன்றவற்றை வாங்கி சில நாட்களுக்குப் பின் சமைத்தால் அதிலிருந்து ஒரு வாடை வரும் எதை தவிர்க்க சிறிது எலுமிச்சை சாறையும், சர்க்கரையும் கலந்து சமைக்க வேண்டும் அவ்வாறு சமைத்தால் எந்த வாடையும் இருக்காது.

 தோசை சுடும்போது தோசை, கல்லில் ஒட்டிக்கொண்டால் வெங்காயத்தை பாதியாக வெட்டி தோசை கல்லில் ஒவ்வொரு தோசை சுடும் போதும் தேய்த்தால் சுலபமாக தோசை வார்ப்பதற்கு வரும் .

பூரி மாவு பிசையும் போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமுத்துப் போகாமல் இருக்கும்.

 காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இலைகளை நீக்கிவிட்டு ஒரு பிடி உப்பு கலந்த நீரில் குடை மாதிரி அமர்ந்திருக்கும் படி வைக்க வேண்டும் .இப்படி செய்தால் கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து விடும்.

 சப்பாத்தியை அடுப்பில் இருந்து எடுத்தவுடன் ஓட்டை உள்ள தட்டில் போட்டு விட்டால் அடியில் வைத்த சப்பாத்திகள் ஆவியினால் தண்ணீர் வடிவதை தவிர்க்கலாம்.

 பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு கப் கோதுமை மாவுக்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற விகிதத்தில் கலந்து பிசைந்தால் பூரி வந்து போல் நன்கு உப்பி வரும்.

 மோர் குழம்பு செய்யும் போது மிளகாய் வற்றலை அரைத்து சேர்த்தால் குழம்பு வெள்ளையாக இருக்கும்.

 தேங்காய் சட்னிக்கு அரைக்கும் போது ஒரு பல் பூண்டு, சிறு துண்டு இஞ்சி, சிறிது புளி சேர்த்து அரைத்தால் சுவையும், மனமும் அதிகமாகும்.

 பொங்கல் செய்கையில் தண்ணீருடன் நெய் அல்லது டால்டா சேர்ந்தால் பொங்கல் பாத்திரத்தில் ஒட்டாது.

 பகலாபாத் தயாரிக்கும் போது ஒரு கப் அரிசிக்கு ஒரு டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் சேர்த்தால் குலைவாக இருக்கும்.
 பாலில் உறை ஊற்றும்போது அதனுடன் அரிசி கஞ்சியை சேர்த்தால் தயிறு கெட்டியாக கிடைக்கும்.

 பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெயில் தண்ணீர் கலந்திருந்தால் ஒரு துண்டு வாழையில்லையே போட்டு வைத்தால் எண்ணெய் வெடிப்பது குறையும்.

 தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயாரிக்கும் போது பொட்டுக்கடலையை நன்கு எண்ணெயில் வறுத்து கொட்டினால் சுவை அள்ளும்.

 அரைத்த தேங்காய் சட்னி மீதமாகி ஃப்ரிட்ஜில் வைக்கும் போது சிறிதளவு வெண்ணீர் கலந்து பயன்படுத்தினால் புதிதாக அரைத்தது போலவே இருக்கும்.

 பச்சை பட்டாணி சீசன் முடிகிற சமயத்தில் அதிக அளவு பட்டாணியை வாங்கி தோலை உரித்து எடுத்து சிறுசிறு பாலித்தின் கவர்களில் 250 கிராம் அளவில் பிரிட்ஜில் ஃப்ரிட்ஜரில் வைத்து விடுவோம். தேவைப்படும்போது ஒரு பாக்கெட் எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைத்திருந்தால் போதும் சமையலுக்கு தேவையான பிரஸ் பட்டாணி தயார்.

 ஜவ்வரிசி வடகம் செய்ய தண்ணீர் கொதிக்கும் போது சிறிதளவு சீசை துருவி சேர்த்தால் வடகம் காய்ந்ததும் பொரிக்கும் போது நல்ல சுவையுடன் இருக்கும்.

 இட்லி மாவு, உளுந்து பற்றாக்குறையால் கெட்டியாகிவிட்டால் பொரிக்காத அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் அரைத்து இட்லி மாவுடன் கலந்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.

 வேகவைத்த பயத்தம் பருப்பு, துவரம் பருப்போ, மீந்துவிட்டால் அவைகளை கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்ய வித்தியாசமான சுவையில் இருக்கும் .

முளைகட்டிய கொண்டை கடலையை அரைத்து சப்பாத்தி செய்தால் சத்தாகவும், சுவையாகவும் இருக்கும்.

 காய்கறிகளை வறுவல் செய்யும் போது எண்ணெய் சூடாகும் சமயத்தில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து வறுவல் செய்தால் அதன் சுவை சூப்பராக இருக்கும் .

உருளைக்கிழங்கு வறுலை செய்யும் போது புளிப்பு இல்லாத தயிரை அரை தேக்கரண்டி சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் .

இட்லி சுடும் போது மாவில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்,

 சப்பாத்தி சுட்டதும் அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சப்பாத்தி நீண்ட நேரத்திற்கு சூடாக இருக்கும்.

 உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது நறுக்கிய வில்லைகளை மேல் சிறிது பயத்த மாவு தூவி விட்டு பொறித்தால் சிப்ஸின் சுவை பிரமாதமாக இருக்கும்.

 சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிச்சர் சீக்கிரம் நமக்கு போகாமல் இருக்கும்.

வேப்பிலையுடன் பத்து மிளகு , ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து பெரியவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் சிறியவர்களுக்கு அதில் கால் பாகமும் காலை மாலை வெறும் வேலையும் இரண்டு நாட்களுக்கு கொடுக்க வயிற்றில் உள்ள பூச்சிகள் உடனே மடிந்து விடும்.
 சூப்பில் போட பிரட் துண்டுகள் இல்லாத போது ஜவ்வரிசி வடகம் பொரித்து உடைத்து துண்டுகள் ஆக்கி சூப்பில் சேர்த்தால் சுவையும் மனமும் கூடும்.

 கையில் தீப்புண் ஏற்பட்டால் கோதுமை மாவினுள் கையை வைத்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தால் புண் சரியாகும்.

 எலுமிச்சம் பழத்தை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பிறகு சாறு பிழிந்தால் அதிகப்படியான சாறு கிடைக்கும்.

 பிளாஸ்டிக் சூடான திரவத்தை ஊற்றும் போது பிளாக்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும் .

கை துடைக்கும் துணி, சமையலறையில் பயன்படுத்தும் துணி ஆகியவற்றை ஷாம்பு கலந்து நீரில் அலசினால் துணி பளிச்சென்று இருக்கும் .

சாம்பார் வைக்கும் போது இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அதனுடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

 உளுந்தம் பருப்பை ஊறவைத்து நைசாக அரைக்க வேண்டும்.

 உளுந்தம் பருப்பை அரைத்து தூண்டும் சமயத்தில் அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகிவற்றை சேர்த்து அரைத்து வடை செய்தால் வடை நன்றாக இருக்கும்.

 உளுந்தம் பருப்பை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக இல்லாமல் ஒன்று இரண்டாக அரைத்து அதில் சிறிதளவு பச்சை மிளகாய், கடுகை சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெயிலில் காயவைத்து எண்ணெயில் பொரித்து எடுத்து சாப்பிடலாம்.
 தோசை மாவில் உருளைக்கிழங்கை வேக வைத்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை நன்றாக வரும் சுவையாகவும் இருக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)