தேவையானவை
வறுத்து அரைத்த கருப்பு உளுந்து மாவு - 100 கிராம்
பச்சரிசி மாவு - ஒரு சிட்டிகை
கருப்பட்டி - 100 கிராம்
நெய் அல்லது நல்லெண்ணெய் - நான்கு டேபிள் ஸ்பூன்
சுக்கு ஏலக்காய் - சிறிதளவு
தேங்காய் துருவல் - ஒரு கப்
செய்முறை
உளுந்து மாவு , அரிசி மாவு இரண்டையும் சேர்த்து இரண்டு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை கரைத்து வடிகட்டி அடி கனமான கடாயில் கரைத்து வைத்துள்ள அரிசி, உளுந்து கலவையை சேர்த்து கிளறவும் .
பாதி வெந்ததும் கருப்பட்டி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
நன்றாக சேர்ந்து வரும்போது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
குறைவான அனலில் நீண்ட நேரம் கிண்டிய வாறே சமைக்க வேண்டும்.
இறுதியாக சுக்கு, ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் தூவி இறக்கவும்.