தேவையானவை
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு தட்டியது - 10 பல்
துவரம் பருப்பு - ஒரு கை
தக்காளி - இரண்டு
வெங்காயம் - ஒன்று
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - சிறிதளவு
புதினா கொத்தமல்லி கருவேப்பிலை - சிறிதளவு
வறுத்து பொடி செய்ய
மல்லி - ஒரு மேசனஜ் கரண்டி
கடலைப்பருப்பு - அரை மேசனக்கரண்டி
வரமிளகாய் - ஒன்னு
வெந்தயம் - கால் தேக்கரண்டி
செய்முறை
புளியை வெந்நீரில் ஊற வைத்து துவரம் பருப்பை குழைய வேக வைக்கவும் .
சிறிதளவு எண்ணெயில் மல்லியைத் தவிர வறுத்து பொடி செய்ய கொடுத்தவற்றை வறுத்து கடைசியில் மல்லியை அந்த சூட்டிலேயே வறுத்து ஆற வைத்து எக்கவும்.
புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, பூண்டு இவற்றை லேசாக அமையில் தட்டி வைக்கவும் .
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
பின் அம்மியில் தட்டியவற்றை சேர்த்து கிளறவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் எல்லா தூளையும் சேர்க்கவும் .
இப்போது தக்காளியை சேர்த்து வதக்கி விடவும் .
நன்கு குலைந்ததும் வறுத்து முடித்தவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன்பின் புளி கரைத்த நீரில் வேகவைத்த பருப்பையும் கரைத்து அதில் சேர்க்கவும் நுரைத்து வரும்போது தேங்காய் துருவல் தூவி உடனே இறக்கவும்.