பாஸ்மதி அரிசி - ஒரு கிலோ
ஆட்டுக்கறி - ஒரு கிலோ
பட்டை லவங்கம் - தேவையான அளவு
பூண்டு - 150 கிராம்
இஞ்சி - 150 கிராம்
காய்ந்த மிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 200 கிராம்
கொத்தமல்லி புதினா சேர்த்து - ஒரு கைப்பிடி அளவு
தயிர் - 150 கிராம்
எலுமிச்சை பழம் - ஒன்று
எண்ணெய் - 250 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
இஞ்சி பூண்டு இரண்டையும் தனித்தனியாக அரைக்கவும்.
அதை மூழ்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும் .
பிறகு அந்த தண்ணீரோடு மிளகாயை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் ஆக அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் கடலை எண்ணெய் ஊற்றி அது கரைந்ததும் பட்டை, லவங்கம் , பூண்டு பேஸ்ட்டை சேர்க்கவும்.
பலரும் இஞ்சியையும் பூண்டையும் ஒன்றாக அரைத்து சேர்க்கின்றனர்.
இப்படி செய்யக்கூடாது பூண்டை மட்டும் பச்சை வாசனை போகும் அளவு வதக்கி அதன் பிறகு இஞ்சி பேஸ்ட் சேர்த்து லேசாக வதக்க வேண்டும் .
பின்னர் ஆட்டுக்கறியுடன் காய்ந்த மிளகாய் பேஸ்ட் சேர்த்து அது கறியோடு நன்கு ஒட்டிக் கொள்ளும் வரை வதக்கவும் .
கூடவே நறுக்கிய வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
தக்காளியை விட வெங்காயம் குறைவான அளவு இருக்க வேண்டும்.
பின்னர் கொத்தமல்லி, புதினா சேர்த்து சுருள வதைக்கி தயிர் , எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
கறி 80% வெந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் விட்டு முக்கால் பதத்தில் வேக வைத்து அகன்ற பாத்திரத்தில் உள்ள பிரியாணியில் வெந்த சாதத்தையும் சேர்த்தி பதமாக கிளறி தம் போட வேண்டும் .
அதாவது விறகு கறியில் பாத்திரத்தை வைத்து அதை மூட வேண்டும் ஒரு கிலோ பாஸ்மதி அரிசிக்கு சுமார் பத்து நிமிடங்கள் தம் போட்டால் போதும்.