தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் - 10
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் கிண்ணம்
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - இரண்டு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு மேசை கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
பச்சை மிளகாய், உப்பு, தேங்காய் துருவல், புளி, வெல்லம் சேர்த்து அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும் .
எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.
புளியும் , தேங்காயும் மிளகாயின் காரத்தை குறைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.