தேவையானவை
புழுங்கல் அரிசி - 300 கிராம்
முழு பயிறு - 200 கிராம்
முளை கட்டிய கொண்டை கடலை - 200 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பீர்க்கங்காய் - 1
காய்ந்த மிளகாய் - ஆறு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
புழுங்கல் அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து களைந்து நீரை வடித்து இஞ்சி, மிளகாய் வற்றல் சேர்த்து கரகரப்பாக அரைக்க வேண்டும் .
முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலையை தனியாக அரைத்து மாவுடன் சேர்த்து பீர்க்கங்காய் நறுக்கிய துண்டுகளையும் போட்டு உப்பு சேர்த்து கலந்து அடுப்பில் தோசை கல்லை வைக்க வேண்டும் .
அதில் மாவை பரவலாக விட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.