கேழ்வரகு அல்வா

kuttybabuPPT
0
கேழ்வரகு அல்வா

தேவையானவை 

கேழ்வரகு - ஒரு கப் 

நாட்டு சர்க்கரை - 2 கப்

 நெய் - ஒரு கப் 

முந்திரி, பாதாம், ஏலக்காய் தூள் - தேவைக்கு 

செய்முறை

கேழ்வரகு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்.

 பிறகு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

 அரைத்த கேழ்வரகை வெள்ளைத் துணி அல்லது நைசான ஃபில்டரில் நன்கு வடிகட்டி பால் எடுக்கவும்.

 வடிகட்டும் பொழுது கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கசக்கி பிழிந்து பால் எடுக்கவும்.

 இதை ஒரு அகலமான பாத்திரத்தில் வைக்கவும் .

ஒரு மணி நேரம் கழித்து பார்த்தால் பால் நன்கு தெளிந்து இருக்கும் .

மேலாக உள்ள தண்ணீரை கொட்டிவிட்டு அடியில் உள்ள கெட்டியான பகுதியை எடுத்துக் கொள்ளவும்.

 இதை அடி கனமான கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்து கிளறவும் .

மெல்லிய தீயில், கைவிடாமல் கிளறினால் சிறிது நேரத்தில் வெந்துவிடும் .

பிறகு இதில் நாட்டு சர்க்கரை கொட்டி கிளறவும் .

மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு அதில் மூன்று டீஸ்பூன் நாட்டு சர்க்கரை போடவும்.

 நாட்டு சர்க்கரை நெய்யில் பொன்னிறமாக கரையும் வரை வறுத்து இதையும் அல்வாவில் சேர்த்து கிண்டவும்.
 இடையிடையே நெய் சேர்த்து கிளறி அல்வா நன்கு பதமாக வந்ததும் முந்திரி, பாதாம் , ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)