அவல் பணியாரம்

kuttybabuPPT
0
அவல் பணியாரம் 

தேவையான பொருட்கள் 

அவல் - கால் கிலோ 

வெல்லம் - கால் கிலோ

 வெண்ணை - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 நெய் - ஒரு குழி கரண்டி

 உப்பு - ஒரு சிட்டிகை 

செவ்வாழை - 2 

தேங்காய் பால் - அரை லிட்டர்

 ஏலக்காய் - பொடி

 செய்முறை 

அவலை கழுவி தேங்காய் பாலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

 வெல்லத்தை கரைத்து ஒரு கொதி விட்டு ஆற வைத்து வடிகட்டி அவலில் ஊற்றவும் .

வெண்ணெய் , ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்க்கவும்.

 வாழைப்பழத்தை மசித்து சேர்க்கவும்.

 இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

 தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம்.

 குழி பணியாரம் கடாய் வைத்து சூடானதும் நெய் சிறிது விட்டு மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.

 ஒரு புறம் வெந்ததும் திருப்பி போடவும் .

மறுபுறம் வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து பரிமாறலாம் .

சுவையான வெண்ணை அவல் பணியாரம் தயார்.

 அவலின் நன்மைகள்

 எளிதில் செரிமானம் ஆகும்.

 உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும் .

உடல் சூட்டை விரைந்து தணிக்கும்.

 செல்களை புத்துணர்ச்சி பெற உதவும்

 உடல் எடையை குறைக்கும்.

 இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் .
இவ்வளவு வகையான அவலில் நன்மைகள் அதிகம் கிடைத்தாலும் அளவு உடனே சாப்பிட வேண்டும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)