விருதுநகர் ஸ்பெஷல் பால் உருளைக்கிழங்கு கறி

kuttybabuPPT
0
விருதுநகர் ஸ்பெஷல் பால் உருளைக்கிழங்கு கறி
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3

 பச்சை பட்டாணி - அரை கப்

 முந்திரி - பத்து

 பச்சை மிளகாய் - 4 

கசகசா - அரை டீஸ்பூன் 

பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

 ஏலக்காய் - 2 

கிராம்பு - ரெண்டு 

பட்டை - நாலு 

பெருங்காயம் - இரண்டு

 தக்காளி - ஒன்று

 பூண்டு -  நாலு பல் 

இஞ்சி - ஒரு அங்குல துண்டு

 அன்னாசி பூ - இரண்டு

 பெருஞ்சீரகம் - அரை டீஸ்பூன்

 உப்பு - தேவைக்கு ஏற்ப 

கருவேப்பிலை - ஒரு கொத்து

 தேங்காய் பால் - முதல் + இரண்டாம் பாகம் தேங்காய் 

எண்ணெய் - தாளிக்க

செய்முறை

உருளைக்கிழங்கை வேக வைத்து மேல் தோலை நீக்குங்கள்.

 பச்சை பட்டாணியை தனியாக வேக வையுங்கள் .

அதனுடன் கேரட், பட்டர், பீன்ஸ் போன்ற காய்களையும் சேர்க்கலாம்.

 இரண்டு பச்சை மிளகாய், முந்திரி, கசகசா, பெருஞ்சீரகம் , ஏலக்காய், கிராம்பு , பட்டை இவற்றை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பசை போல அரைக்கவும் .

அடுத்து பூண்டு மற்றும் இஞ்சி நசுக்கி வைக்கவும் .

ஒரு வானிலையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம் , அன்னாசி பூ போட்டு தாளிக்கவும்.

 அடுத்து பூண்டு இஞ்சி போட்டு லேசாக வதக்கவும்.

 அரிந்த இரண்டு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

 பின்னர் தக்காளியை சேர்த்து வதக்கவும் .

அடுத்து அரைத்து வைத்த கலவையை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.

 இப்போது அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.

 பிறகு அந்த கலவையில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணியை சேர்க்கவும்.

 இப்போது முதல் தேங்காய் பாலை ஊற்றி மேலும் இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

 உறுதியாக உப்பு சேர்த்து, கருவேப்பிலை தூவி அடுப்பை அடைக்கவும்.

 ருசியான விருதுநகர் ஸ்பெஷல் பால் உருளைக்கிழங்கு தயார்.
 இதை சாதத்துடன் சாப்பிடுவதற்கு கொஞ்சம் கெட்டியான பதத்திலும், இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு தளர்வான பதத்திலும் தயாரிக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)