முந்திரி அப்பம்

kuttybabuPPT
0
முந்திரி அப்பம் 
தேவையான பொருட்கள் 

பச்சரிசி - ஒரு கப்

 முந்திரி - கால் கப்

 சர்க்கரை - ஒன்னே கால் கப் 

தேங்காய் துருவல் - ரெண்டு ஸ்பூன்

 பால் - முக்கால் கப் 

நெய் அல்லது எண்ணெய் - பாெரிப்பதற்கு 

செய்முறை 

பச்சரிசியை ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைக்கவும்.

 முந்திரி , தேங்காய் துருவலை சேர்த்து அரைக்கவும் .

இந்தக் கலவையில் அரைத்து சலித்த அரிசி மாவையும் சேர்த்து பஜ்ஜி பதத்திற்கு கலந்து கொள்ளவும் .

தேவை என்றால் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்துக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடானதும் சிறிய குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் நடுவில் ஊற்ற வேண்டும்.

 ஒவ்வொன்றாகத்தான் ஊற்ற வேண்டும்.

 அப்பம் மேலே வந்தவுடன் அதை லேசாக திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து எண்ணெயை வடிய விடவும்.

 மெத்தன்று இருக்கும் போதே எடுத்து விட வேண்டும் .
அவ்வளவுதான் சுவையான முந்திரி அப்பம் தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)