தேவையானவை
சப்பாத்தி - ஐந்து
துருவிய வெல்லம் - கால் கப்
பாதாம் பருப்பு , முந்திரிப்பருப்பு - தலா 10
நெய் - நான்கு டேபிள் ஸ்பூன்
செய்முறை
சப்பாத்தியை துண்டுகளாக்கி மிக்ஸியில் நீர் விடாமல் பொடியாக்கவும் .
பாதாம் முந்திரியை பிறகு பொடியாக்கவும்.
பொடித்த சப்பாத்தி, பொடித்த பருப்புகள், துருவிய வெல்லம், நெய் நான்கையும் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை சுற்றி எடுத்து லட்டுகளாக பிடிக்கவும் .
விருப்பப்பட்டால் இந்த லட்டுக்களை தேங்காய் துருவலில் புரட்டி எடுத்தும் சாப்பிடலாம்