தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் - ஐந்து
பச்சை மிளகாய் - ஐந்து
எலுமிச்சை - ஒன்று
கரம் மசாலா - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
முதலில் காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்ஸியில் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின் சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது எலுமிச்சை சாறு சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஃப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் தேவைக்கற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார்.