சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்

kuttybabuPPT
0
சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ்

தேவையான பொருட்கள் 

சிக்கன் - 1/2 கிலோ

 முட்டை - 4 

சாம்பார் வெங்காயம் - 100 கிராம் 

இஞ்சி - சிறு துண்டு 

பூண்டு - ஆறு பல்

 காய்ந்த மிளகாய் - 4 

தனியா - ஒரு டேபிள் தேக்கரண்டி

 மிளகு - ரெண்டு தேக்கரண்டி 

உப்பு - தேவையான அளவு 

எண்ணெய் - ஒரு குழி கரண்டி

 கடுகு, கருவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

 செய்முறை

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

 முட்டையை வேக வைத்து மஞ்சள் கருவை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

 தனியா, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளவும் .

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் .

அரைத்த மசாலாவை சேர்த்து சிக்கனையும் சேர்த்து சிறிது நீரூற்றி வேக விடவும்.

 தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

 சிக்கனும் மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும் வெட்டி வைத்த முட்டையை சேர்த்து கிளறவும்.
 குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து இறக்கினால் சிக்கன் முட்டை மிளகு சாப்ஸ் ரெடி.

Post a Comment

0Comments
Post a Comment (0)