முட்டை லாப்பா

kuttybabuPPT
0
முட்டை லாப்பா 

தேவையான பொருட்கள் 

 மைதா மாவு - அரை கிலோ

 உப்பு - தேவையான அளவு 

சர்க்கரை - அரை டீஸ்பூன்

 நெய் - அரை டீஸ்பூன்

 வெங்காயம் - ஐந்து 

மிளகு , சீரகத்தூள் - சிறிதளவு 

தக்காளி - 2 

முட்டை - 5 

செய்முறை 

சுத்தமான மைதா மாவில் சிறிதளவு சர்க்கரை , அரை ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.

 அதில் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எண்ணெய் தடவி ஊறவைத்து கொள்ளவும்.

 பிறகு அதை சப்பாத்தி கல்லில் வைத்து நன்றாக திரட்டி கொள்ளவும்.

 ஒரு பவுலில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி உடன் சிறிதளவு மிளகுத்தூள், அரை ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

 பிறகு திரட்டி வைத்துள்ள மாவை கல்லில் இட்டு அதில் கலக்கி வைத்துள்ள வெங்காயம், முட்டை கிரேவியை உற்றவும்.
 நான்கு பக்கமும் சிறிதளவு மடக்கி விட்டு சுற்றி தேவையான அளவு எண்ணெய் விட்டு திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை லாபா தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)