வரகரிசி கிச்சடி

kuttybabuPPT
0
வரகரிசி கிச்சடி 

தேவையானவை 

வரகரிசி  - 100 கிராம்

 பாசிப்பருப்பு - 25 கிராம்

 பீன்ஸ் - 50 கிராம் 

கேரட் - 50 கிராம் 

பச்சை மிளகாய் - 5 

உருளைக்கிழங்கு - 25 கிராம் 

பெரிய வெங்காயம் - 3 

இஞ்சி - ஒரு துண்டு 

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

 தக்காளி - ரெண்டு

 கடுகு, உளுந்தம் பருப்பு - ரெண்டு ஸ்பூன் 

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன்

 எண்ணெய் - சிறிதளவு 

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு 

உப்பு -  தேவையான அளவு

 செய்முறை

வாணலி அல்லது பிரஷர் பேனில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு , உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கருவேப்பிலை , பச்சை மிளகாய், போட்டு வதக்கி அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட், தக்காளி, சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் விட்டு கொதி வந்ததும் வரகரிசி பாசிப்பருப்பை போட்டு கிளறி மூடி வைத்து வெந்ததும் கீழே இறக்கி நெய்யில் தாளித்த கருவேப்பிலை, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)