பருப்பு உசிலி பீன்ஸ்

kuttybabuPPT
0
பருப்பு உசிலி பீன்ஸ் 

தேவையான பொருட்கள் 

துவரம் பருப்பு -  25 கிராம்

 கடலை பருப்பு - 25 கிராம்

 பீன்ஸ் - 100 கிராம் 

மிளகாய் வத்தல் - 3 

சீரகம் - ஒரு தேக்கரண்டி

 பெருங்காயத்தூள் - அரை தேக்கரண்டி

 மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

 உப்பு - தேவையான அளவு 

தாளிக்க

எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி

 கடுகு - அரை தேக்கரண்டி

 கருவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை

துவரம் பருப்பு, கடலை பருப்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும் .

காெதித்த பிறகு தண்ணீரை நன்கு வடித்து விட்டு அதோடு மிளகாய் வத்தல், சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும் .

பெருங்காயத் தூளும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

 பிறகு பருப்பு கலவையை வடை போல் தட்டி இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேக வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

 ஆறிய பிறகு கைகளால் உதிர்க்கவும் அல்லது மிக்ஸியில் போட்டு ஒரு சுற்றி சுற்றி எடுத்தால் கலவை மென்மையாகிவிடும்.

 பீன்ஸை புதிதாக நறுக்கி வைக்கவும்.

 ஒரு வாணிலையில் 50 மில்லி தண்ணீர் ஊற்றி அதோடு நறுக்கி வைத்துள்ள பீன்ஸ் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து தனியே எடுக்கவும்.

 அடுப்பில் அதே வாணிலையை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும் .

கடுகு வெடித்த உடன் கருவேப்பிலை சேர்க்கவும் .

பிறகு அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.
 பிறகு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பீன்ஸை சேர்த்து நன்றாக கிளறி உப்பு சரிபார்த்து அடுப்பை அணைக்கவும்.

 சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)