தேவையான பொருட்கள்
நுங்கு - 10
தேங்காய் பால் - அரை லிட்டர்
துளசி - பத்து இலை
கருப்பட்டி - 250 கிராம்
ஏலக்காய் - அரை டீஸ்பூன்
பாதாம் - 10
பிஸ்தா - 10
முந்திரி - பத்து
செய்முறை
திக்கான தேங்காய் பால் அரை லிட்டர் எடுத்துக் கொள்ளவும்.
அதில் துளசியை அரைத்து வடிகட்டி சேர்க்கவும்.
கருப்பட்டி போட்டு நன்கு கரைக்கவும்.
பாதாம், பிஸ்தா, முந்திரியை கொரகொரவென்று அரைத்து சேர்க்கவும் .
நொங்கை திப்பி திப்பியாக மசித்து சேர்க்கவும் .
ஏலக்காய் பொடி போட்டு நன்கு கலக்கவும்.
குல்பி ஐஸ் போல்டில் ஐஸ் கரைசலை ஊற்றி நடுவில் குச்சி சொருகி மூடி வைத்து ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைக்கவும்.
மூன்று மணி நேரம் கழித்து எடுத்து பத்து நொடி தண்ணீரில் போட்டு பிரித்து எடுக்கவும்.
சுவையான நொங்கு துளசி குல்பி ஐஸ் தயார் .
குறிப்பு
நொங்கு, தேங்காய் பால், துளசி போல் பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகள், கீரைகள், பழங்கள் ஆகியவற்றிலும் விதவிதமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.