தேவையான பொருட்கள்
முந்திரி - 150 கிராம்
சிக்கன் - 500 கிராம்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - மூன்று
பட்டை - இரண்டு
கிராம்பு - ஆறு
ஏலக்காய் - 3
வெங்காயம் - 2
ஜாதி பத்திரி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் - ஒன்னரை டீஸ்பூன்
கரம் மசாலா - ஒன்னு
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
பாதாம் - 2 டீஸ்பூன்
கசகசா - 50 கிராம்
செய்முறை
நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ஊற வைத்த முந்திரி பருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி ஊற வைத்துள்ள கசகசா அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பின் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணிலையில் எண்ணெய் விட்டு கடுகு , உளுந்தம் பருப்பு , காய்ந்த மிளகாய் , பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் , சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
பின்னர் இஞ்சி பூண்டு விழுது போட்டு அதன் பச்சை வாசனை போனபின் மல்லி தூள், மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பத்து முதல் 15 நிமிடங்கள் கொதித்த பின் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கழித்து ஒரு சிட்டிகை கரம் மசாலா தூவி இரண்டு நிமிடம் கழித்து இறக்கினால் காஜு சிக்கன் தயார்.