கொல்கத்தா மலாய் சந்தேஷ்

kuttybabuPPT
0
கொல்கத்தா மலாய் சந்தேஷ்

தேவையான பொருட்கள் 

கொழுப்பு நீக்காத பால் - 2 லிட்டர்

 எலுமிச்சம் பழ சாறு - ஒரு டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை அல்லது வெல்லம் - அரை கப்

 ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்

 மலாய் தயாரிக்க

கொழுப்பு நீக்காத பால் - ஒரு லிட்டர்

 ரோஸ் வாட்டர் - ரெண்டு டேபிள் ஸ்பூன்

 முந்திரி, பிஸ்தா, பாதாம் பொடியாக நறுக்கியது - கால் கப்

 குங்குமப்பூ - அரை டீஸ்பூன்

 செய்முறை

2 லிட்டர் பாலை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும் .

அது நன்றாக கொதிக்கும் போது அதில் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி கிளறவும்.

 ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பால் திரிய தொடங்கும் .

அது முழுவதுமாக திரிந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்கவும் .

பின்பு இந்த பாலை சுத்தமான மெல்லிய பருத்தி துணியில் ஊற்றி வடிகட்டவும் .

துணியில் தங்கியிருக்கும் பன்னிரை மூட்டையாக கட்டவும்.

 அதன் மேல் கனமான பாத்திரத்தை வைத்து தண்ணீர் முழுவதுமாக வடியும் படி செய்யவும் .

பின்பு அந்த பன்னீருடன் பொடித்த சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாக மசியவும் .

இதை வடமாநிலத்தில் சந்தேஷ் இன்று குறிப்பிடுவார்கள்.

 பின்னர் அடி கனமான அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.

 பால் நன்றாக கொதித்து பாதி அளவாக வற்றியதும் அதில் சர்க்கரை, ஏலக்காய் பொடி , குங்குமப்பூ , ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

 பிறகு அதில் தயாரித்து வைத்திருக்கும் சந்தேஷத்தை உதிர்த்து போட்டு நன்றாக கிளறவும்.

 இந்த கலவை கெட்டியானதும் நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.
 பின்னர் விரும்பிய வடிவில் வெட்டி முந்திரி, பாதாம், பிஸ்தா கலவையை அதன் மேல் தூவி பரிமாறவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)