தேவையானவை
மைதா மாவு - ஒரு கப்
பொடித்த சர்க்கரை - முக்கால் கப்
சர்க்கரை - அரைக்கப்
சோடா உப்பு - அரை டீஸ்பூன்
பால் - ரெண்டு டேபிள் ஸ்பூன்
தயிர் - கால் கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
வாய் அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, பொடித்த சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கைகளால் கலக்கவும்.
பிறகு பால், தயிர், நெய் சேர்த்து நன்கு கலந்து கைகளால் பிசையவும்.
தேவையானால் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பால் பன்னுக்கான மாவு ரெடி.
இதை அப்படியே 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
இனி பாகு தயாரிக்க வேண்டும்.
தண்ணீரில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து லேசான பகுபதம் வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும் .
வாணலியில் தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் இருந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும் .
ஆறியதும் சர்க்கரை பாகு போட்டு உடனே வெளியே எடுத்து விடவும்.
மொறுமொறுப்பான சுவையான மதுரை பால்பன் ரெடி.