பன்னீர் பர்பி

kuttybabuPPT
0
பன்னீர் பர்பி 

தேவையான பொருட்கள்

துருவிய பன்னீர் - 400 கிராம்

 கஸ்டர்டு மில்க் - 300 கிராம் 

சர்க்கரை - கால் கப் 

பால் பவுடர் - அரை கப்

 கொழுப்பு நீக்காத பால் - அரைக்கப்

 ஏலக்காய் பொடி - கால் டீஸ்பூன்

 செய்முறை 

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.

 பால் கொதிக்க தொடங்கியதும் அதில் துருவிய பன்னீரை சேர்த்து கிளறவும்.

 இந்த கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் அதில் கண்டன்ஸடு மில்க்கை ஊற்றி கலக்கவும்.

 பின்பு மில்க் பவுடர், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகியவற்றை போட்டு கட்டிகள் உருகாதவாறு கலக்கவும்.

 கலவை நன்றாக கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

 நெய் தடவிய தட்டில் இந்த கலவையைக் கொட்டி சமமாக பரப்பி விடவும் .

அது ஆறியதும் தட்டோடு குளிர்பதனை பெட்டியில் வைக்கவும்.

 30 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும் .
அவற்றின் மேல் நறுக்கிய பாதாம், முந்திரி ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)