தேவையானவை
கடுகு - 40 கிராம்
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பால் பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
மல்லி விதை - 50 கிராம்
வெந்தயம் - அரை கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - ஒரு கையளவு
பூண்டு - ஒரு கையளவு
நல்லெண்ணெய் - நான்கு மேசை
கரண்டி
கருவேப்பிலை - இரண்டு கொத்து
கல்லுப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
கடுகை சிவக்க வறுத்து பொடியாக்கி கொள்ளவும் .
சீரகம், மிளகு, பெருங்காயம், மல்லி விதை, வெந்தயம் இவை அனைத்தையும் தனித்தனியாக எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து சின்ன வெங்காயம், பூண்டுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையுடன் புளி கரைசலும், மஞ்சள் தூளும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து சிறிதளவு சுண்டி பச்சை வாசனை போன நிலையில் கடுகு பொடியை சேர்த்து கலக்கவும்.
கடுகை சேர்த்த பின் கொதிக்க விடக்கூடாது.
சூடான எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து குழம்பிற்குள் ஊற்றவும்.
பிரசவித்த தாய்மார்களுக்கு புழுங்கள் அரிசி சோற்றுடன் இக்குழம்பை கொடுக்கலாம்.
பிரசவத்துக்கு பிறகு மூக்கரட்டையில் எல்லாமே மருந்தாக உள்ளது.
இதன் வேரை கசாயம் ஆக்கி குடித்தால் வாயு புடிப்பு நீங்கும் .
முக்கிரட்டை வேரை சாம்பார், கஞ்சி போன்ற உணவுகளில் பயன்படுத்துவதன் மூலம் வாயு தொல்லையை தவிர்க்க முடியும்.
உடலுக்கு இது நல்ல நோய் எதிர்ப்பாற்றலை கொடுக்கும்.