தேவையானவை
உளுந்து- ஒரு கிண்ணம்
பப்பாளி துண்டுகள் - அரை கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - கால் தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
இஞ்சி - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்
அரிசி மாவு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
உளுந்தை முதல் நாள் இரவில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் அதை மிருதுவாக அரைக்க வேண்டும்.
பின்னர் அதில் உப்பு, பெருங்காயம், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கி லேசாக கலந்து கொள்ளவும்.
அதில் கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பிசையவும்.
அத்துடன் துண்டுகளாக நறுக்கி வைத்து பப்பாளியை சேர்க்கவும்.
அதனுடன் அரிசி மாவு சேர்த்து சிறிது நேரம் மாவை வைக்கவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய விடவும் .
இப்போது மாவு கலவையை எடுத்து மையத்தில் ஒரு துளை செய்து என்னை கொதிக்கும் போது அதில் போட்டு நன்கு வேக விடவும் .
சுவையான பப்பாளி மெதுவடை தயார்.